திருப்பத்தூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாணியம்பாடி தொகுதி செயலாளர் கோவேந்தன் முன்னிலை வகித்தார். நாட்றம்பள்ளி வட்டம், சொரக்காயல் நத்தம் மதுரா வெள்ளாநயக்கனேரி பகுதியில் சுடுகாட்டுக்கு செல்லும் இடத்தில் முள்வேலி அமைத்து பட்டியலின மக்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர் எனவே பழையபடி சாலையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் பாஸ்கர பாண்டியனை சந்தித்து மனு அளித்தனர். அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.