தமிழக செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது தொடரும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்தும், அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் வசதிகளை செய்து தர மறுக்கும் அதிகாரிகளை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாநில முதன்மை செயலாளர் பாவரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பட்டியலின மக்களுக்கான வழிபாட்டு உரிமையை உறுதி செய்திட வேண்டும். பட்டியலின மக்கள் மீதான சாதிய வன்கொடுமைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை உரிமைகள் மற்றும் வசதிகளை பாரபட்சம் இன்றி அதிகாரிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு