தமிழக செய்திகள்

தேவாலயத்தில் புகுந்த கொள்ளையர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலி

தேவாலயத்திற்குள் கொள்லையர்கள் புகுந்ததால் ஏற்பட்ட் அச்சத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 குழந்தைகள் உள்பட 29 பேர் பலியானார்கள்.

மன்ரோவியா:

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா தலைநகர் மன்ரோவியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் புதன்கிழமை இரவு பிரார்த்தனை கூட்டம் நடந்துகொண்டு இருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தேவாலயத்துக்குள் நுழைந்தது. அவர்கள் கொள்ளையடிப்பதற்காக அங்கு புகுந்துள்ளனர்.

இதை பார்த்ததும் தேவாலயத்தில் இருந்த மக்கள் தப்பிக்க அங்கும் இங்கும் ஓடினார்கள். இதனால் அங்கு கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி மிதித்தபடி வெளியேறினர். இந்த கூட்டநெரிசலில் சிக்கி 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...