தமிழக செய்திகள்

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

தினத்தந்தி

அன்னவாசல்,

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள விட்டாநிலைப்பட்டியில் வசிக்கும் மதலையம்மாள் (வயது45) என்பவர் மீது கடந்த வருடம் குடும்ப பிரச்சனை காரணமாக அவரது கணவர் வேளாங்கண்ணி (வயது45) மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்து விட்டதாக இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் வேளாங்கண்ணி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல்காதர் குற்றவாளி வேளாங்கண்ணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். மேற்படி அபராதத் தொகையைக் கட்ட தவறினால் மேலும் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்