தமிழக செய்திகள்

மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை

மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை விதித்து அரியலூர் மகிளா விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தினத்தந்தி

பாலியல் பலாத்காரம்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை மகன் செல்வகுமார்(வயது 36). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம், விறகு பொறுக்கிக்கொண்டு இருந்த வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதன்பின் பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த அந்த பெண்ணின் தாய் கடந்த 2019-ம் ஆண்டு இதுகுறித்து ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

வாழ்நாள் சிறை

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த அரியலூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் குற்றவாளியான செல்வகுமார் வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்ட தவறும் பட்சத்தில் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்