தமிழக செய்திகள்

’சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு’: மு.க.ஸ்டாலின் பதிவு

அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் 'அன்புக் கரங்கள்' திட்டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் குழந்தைகளின் பள்ளி, உயர்கல்வி செலவுகளையும் அரசே ஏற்கிறது. இந்த நிலையில், அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் பயனடைந்த மாணவ, மாணவிகளின் வீடியோக்களை பகிர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

கல்விக்கான உதவிகளை வழங்குவதைக் கடந்தும், உறவாய் அரவணைத்து மகிழ்ச்சியை வழங்குவதே அன்புக்கரங்கள்! இத்தகைய மகிழ்ச்சியை மற்ற குழந்தைகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வழங்கிட வேண்டும்! சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து