தமிழக செய்திகள்

குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் சாரல் மழை

குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 3 மாதங்கள் பெய்யும். ஆனால் நடப்பாண்டில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய பின்னரும் குமரி மாவட்டத்தில் மழை தொடங்கவில்லை. அதே வேளையில் மழைக்கான அறிகுறிகள் தென்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மலையார பகுதிகள், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகள் மற்றும் களியல், திற்பரப்பு, திருந்திக்கரை, குலசேகரம், திருவரம்பு உள்ளிட்ட இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது. இதுபோல் நண்பகலிலும், மாலையிலும் சாரல் மழை பெய்தது. மேலும் இந்த பகுதியில் நாள் முழுவதும் வெயிலின் தாக்கம் இல்லாமல் குளிர்ச்சியான கால நிலை நிலவியது. பள்ளிக்கூடங்கள் திறந்த முதல் நாளில் வெயிலின் தாக்கம் குறைந்து சாரல் மழை பெய்ததால் வகுப்பறைகளில் மாணவர்கள் உற்சாகமாக காணப்பட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு