திண்டுக்கல்,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. அதே சமயம் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலில் மிதமான வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் வார இறுதி நாளான இன்று கொடைக்கானலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். கொடைக்கானலில் இன்று காலை முதலே குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. ஒரு சில இடங்களில் சாரல் மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இதனால் கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் அங்கு நிலவி வரும் மிதமான வானிலை, சாரல் மழை ஆகியவற்றை ரசித்தவாறு, அங்குள்ள சுற்றுலா தளங்களை பார்வையிட்டு வருகின்றனர்.