தமிழக செய்திகள்

மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது

விருத்தாசலம் பகுதியில் மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது

தினத்தந்தி

விருத்தாசலம்

விருத்தாசலம் பகுதியில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதியில் குளம்போல தேங்கியது.

மின்னல் தாக்கியதில் விருத்தாசலம் மணலூரை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து