கோபி:
அ.தி.மு.க. (அம்மா) அணி கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, அமைச்சர் செங்கோட்டையன் இதுவரை சசிகலா பற்றியோ தினகரன் பற்றியோ தவறாக பேசியது இல்லை. பொதுவாக கொங்கு மண்டல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மரியாதையுடன் உள்ளனர். எனவே அவர்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவது தெரிய வருகிறது என்று கூறினார்.
இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து கோபியில் அவர் நிருபரிடம் கூறியதாவது:-
நான் அரசியலிலும் பொதுவாழ்விலும் பச்சோந்திபோல் அடிக்கடி நிறம் மாறுபவன் அல்ல; எனது முடிவு தெளிவாக இருக்கும்: நேர்மையாக செயலாற்றி வருகிறேன்.என் மீது விமாசனங்கள் வருகிறது, அதற்கு பதில் கூறுவது தனது கடமை
நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களில் சிறப்பாக அரசியல் செய்தவன். எனது அரசியல் வயதுகூட அவருக்கு (புகழேந்தி) இல்லை. அவர் என்னை பற்றி கூறிய கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.