தமிழக செய்திகள்

ராமநாதபுரம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட மது பாட்டில்கள் மாயம் - கோர்ட் ஊழியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு

வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட மது பாட்டில்கள் மாயமானதாக கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கோர்ட் தலைமை எழுத்தர் ராஜ்குமார், ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வழக்கு ஒன்றிற்காக கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட 13 மது பாட்டில்கள் மாயமானதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த மது பாட்டில்களை கோர்ட் ஊழியர்களான ராமலிங்கம் மற்றும் தினேஷ் திருடிச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அந்த 2 பேர் மீது கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்