கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

கள்ளச்சாராயம், கஞ்சா... இவை தான் தி.மு.க. அரசு தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ள புதிய அடையாளங்கள் - எடப்பாடி பழனிசாமி

இனியும் இதே மெத்தனத்தில் அரசு இருப்பின், கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்கதையாகிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நேற்று தூத்துக்குடியில் 8 கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் சிக்கியுள்ளதாக வரும் செய்திகள், இந்த தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருட்கள் புரையோடிப் போய் உள்ளதை மெய்ப்பிக்கின்றன. கள்ளச்சாராயம், கஞ்சா, சிந்தெடிக் போதைப்பொருட்கள் - இவை தான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ள புதிய அடையாளங்கள்!

இனியும் இதே மெத்தனத்தில் இந்த அரசு இருப்பின், கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்கதையாகிவிடும் அவலத்திலே போய் நின்றுவிடும். போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க திராணியில்லையேல் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்