நெல்லை சந்திப்பு பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தச்சநல்லூரை சேர்ந்த குன்னிமலை (வயது 34) என்பதும், அவர் அந்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றுக்கொண்டு இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குன்னிமலையை கைது செய்தனர். அவரிடம் இருந்து 34 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.