கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும் - திருமாவளவன்

இந்திய அரசே, தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கு என்றும் தமிழ்நாடு அரசே, மதுக்கடைகளை இழுத்து மூடு என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் 2-ந்தேதி மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.

இந்நிலையில் அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம், போதைப் பொருள் வேண்டாம், மது விலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. ஆனால், இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன, மது ஆலைகள் இயங்குகின்றன.

இதுதான் நாம் முன்வைக்கிற கேள்வி... எல்லா கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகிறபோது இன்னும் ஏன் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன?

அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மற்றொரு பதிவில், "இந்திய அரசே!.. தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கு! மதுவிலக்கு சட்டத்தை இயற்று!.... தமிழ்நாடு அரசே! மதுக்கடைகளை இழுத்து மூடு!" என்று அதில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து