தமிழக செய்திகள்

மதுபான கடைகள் 2 நாட்கள் மூடல்

தேனி மாவட்டத்தில் மதுபான கடைகளை 2 நாட்கள் மூடுவதற்கு கலெக்டர் முரளிதரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினத்தந்தி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 2-ந்தேதி காந்தி ஜெயந்தி மற்றும் 9-ந்தேதி மிலாடி நபி தினத்தையொட்டி அந்த இரு நாட்களும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், தனியார் மதுபான பார்கள் ஆகியவை மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினங்களில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அந்த 2 நாட்களும், தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், தனியார் மதுபான பார்கள் அனைத்தும் கட்டாயம் மூடப்பட வேண்டும் என்றும், மது விற்பனை எதுவும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது. ஏதேனும் விதிமீறல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட மதுபானக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்