கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

இந்த மாதத்தில் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல்: டாஸ்மாக் அறிவிப்பு

இந்த மாதத்தில் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் டி.மோகன், மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினம் மற்றும் 28-ந் தேதி (வியாழக்கிழமை) வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் ஆகிய நாட்களில் மது விற்பனை செய்யக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற 15-ந் தேதி, 26-ந் தேதி மற்றும் 28-ந் தேதி ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மூடப்பட வேண்டும்.

தங்களுடைய மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்கள் இந்த உத்தரவுகளை மீறாத வகையில் தகுந்த அறிவுரைகளை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவு காரணமாக ஒரே மாதத்தில் மட்டும் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து