தமிழக செய்திகள்

வாழ்வாதாரம் பாதிப்பு

17 நாட்களாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதித்ததாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு மீன்பிடிமுகத்தில் இருந்து 350 விசைப்படகுகள், 300 நாட்டுப்படகுகளில் இருந்து 5 ஆயிரம் மீனவர்கள் இயற்கை இடர்பாடுகள் காரணமாக கடந்த 17 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோவில், பெருமாள்பேட்டை தாழம்பேட்டை, புதுப்பேட்டை சின்னங்குடி, சின்னமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள், மீன்வளத்துறை எச்சரிக்கையால் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவாகளின் படகுகள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்