பெரம்பலுர் மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி கடன் முகாம் கலெக்டர் கற்பகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்தனர். முகாமில் 105 மாணவ-மாணவிகள் பங்கேற்று கல்வி கடனுதவி கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களில் 9 பேருக்கு நிகழ்விடத்திலேயே ரூ.52.40 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. வரப்பெற்றுள்ள அனைத்து விண்ணப்பங்களும் முறையாக சம்பந்தப்பட்ட வங்கியாளர்கள் மூலமாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த அனைவருக்கும் கல்வி கடனுதவி கிடைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகாமில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மேலும் அடுத்த மாதம் (அக்டோபர்), வருகிற நவம்பர் மாதத்தில் 2-வது வாரத்தில் 2 கல்வி கடன் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாவட்ட கவுன்சிலர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.