தமிழக செய்திகள்

100 நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் உதவி - அமைச்சர் நாசர் வழங்கினார்

100 நடைபாதை வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் தலா 10 ஆயிரம் ரூபாய் கடன் உதவியை அமைச்சர் நாசர் வழங்கினார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஆவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வங்கிகள் மூலம் நடைபாதை வியாபாரிகளுக்கு 10 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் நாசர், 100 வியாபாரிகளுக்கு தலா 10 ஆயிரம் வீதம், மொத்தம் 10 லட்சம் ரூபாய் கடன் உதவியும், அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கினார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நாசர், வியாபாரிகளுக்கு தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட்டதாகவும், தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்