தமிழக செய்திகள்

நாகை மாவட்டத்திற்கு டிசம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை

நாகை மாவட்டத்திற்கு டிசம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

நாகை,

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டு தோறும் பெரிய கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 469-வது பெரிய கந்தூரி விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மறுநாள் (1-ந்தேதி) அதிகாலை பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும்நிகழ்ச்சியும், கந்தூரி விழாவும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முகம்மது காஜி ஹு சாஹிப் மற்றும் போர்டு ஆப் டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் டிசம்பர் 13-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்