தமிழக செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

விடுமுறைக்கு பதிலாக அடுத்த மாதம் 7-ந்தேதி பணிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Gokul Raj B

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை திருவப்பூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறைக்கு பதிலாக அடுத்த மாதம் 7-ந்தேதி (சனிக்கிழமை) பணிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டு திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்லூரி, பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும், தேர்வுகள் முன்கூட்டி அறிவித்தபடி நடைபெறும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு