தமிழக செய்திகள்

அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வியாசர்பாடி அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

வியாசர்பாடி சத்தியவாணி முத்து நகர் பகுதியில் வசித்து வருபவர் விஜயா (வயது 55), பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பத்மாவதி (58). இவர்கள் இருவரும் காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வருவது வழக்கம்.

இதை அறிந்த மர்ம நபர்கள் இருவரும் வேலைக்கு சென்ற நேரத்தில் அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றனர். இரவு அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் விஜயா வீட்டில் ரூ.50 ஆயிரம், 1 பவுன் நகையும், பத்மாவதி வீட்டில் ரூ.40 அயிரம் மற்றும் 1 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து இருவரும் செம்பியம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு