தமிழக செய்திகள்

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வந்ததால் அவரது மனைவி கண்டித்துள்ளார்.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகே உள்ள சில்லாநத்தம் கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ஆறுமுகசாமி (வயது 45). இவரது மனைவி முத்துமாரி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆறுமுகசாமி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தினசரி மது குடித்துவிட்டு வந்ததால் அவரது மனைவி கண்டித்துள்ளார்.

இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன வேதனை அடைந்த ஆறுமுகசாமி நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசேதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு