தமிழக செய்திகள்

திண்டுக்கல் அனுமந்தநகரில் கழிவுநீர் ஓடையில் சிக்கிய லாரி

திண்டுக்கல் அனுமந்தநகரில் கழிவுநீர் ஓடையில் சிக்கி லாரி சாய்ந்தது.

தினத்தந்தி

திண்டுக்கல் அனுமந்தநகருக்கு நேற்று கிராவல் மணலை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை முள்ளிப்பாடியை சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டினார். ரெயில்வே மேம்பாலம் அருகே, சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் ஓடை பகுதியை லாரி கடந்தது. அப்போது திடீரென ஓடையின் மேற்பகுதியில் இருந்த சிமெண்டு தளம் உடைந்து பள்ளம் ஏற்பட்டது.

இதில் லாரியின் பின் சக்கரம் சிக்கி கவிழ்ந்தது. இதனால் அந்த பகுதி வழியாக எந்த வாகனங்களும் சல்ல முடியவில்லை. இந்த விபத்தில் டிரைவர் கண்ணன் காயமின்றி உயிர் தப்பினார். இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்