தமிழக செய்திகள்

லாரி திருடியவர் கைது

கங்கைகொண்டான் அருகே லாரி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கங்கைகொண்டான் அருகே உள்ள துறையூரை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 32). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 19-ந் தேதி அலெக்சாண்டர் அவருடைய வீட்டிற்கு அருகே லாரியை நிறுத்திவிட்டு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்த போது லாரியை காணவில்லை.

இதுகுறித்து அலெக்சாண்டர் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், லாரியை திருடி சென்றது மேலஇலந்தகுளம், பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தவமணி (29) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் தவமணியை நேற்று கைது செய்து அவரிடமிருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்