தமிழக செய்திகள்

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

திருவாரூரில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொரடாச்சேரி;

திருவாரூர் தாலுகா போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்னவராயநல்லூர் கூட்டுறவு வங்கி அருகே திருவாரூரைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 70) என்பவர் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் மாவூர் கடை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த புலிவலம் பகுதியை சேர்ந்த சீனிவாசனை (22) கைது செய்து அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதைப்போல திருவாரூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் புலிவலம் பகுதியில் ரோந்து சென்ற போது புலிவலம் வீரமணி (47) என்பவர் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததை அறிந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவரும் கேரளாவில் இருந்து கூரியர் மூலம் லாட்டரி சீட்டுகளை வாங்கி சட்ட விரோதமாக விற்றது தெரிய வந்தது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்