தமிழக செய்திகள்

வெளி மாநில லாட்டரி விற்பனை

திருவோணம் அருகே வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

ஒரத்தநாடு;

திருவோணத்தை அடுத்த வா.கொல்லைக்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன்பால் அந்த பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வா. கொல்லைக்காடு கடைவீதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது60) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வாட்டாத்திக் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.