தமிழக செய்திகள்

காதல் விவகாரத்தால் விபரீதம் கல்லூரி மாணவியுடன் பெற்றோர் தற்கொலை

சேலம் அருகே கல்லூரி மாணவியுடன் பெற்றோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். காதல் விவகாரத்தால் நடந்த இந்த விபரீத சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்,

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பூலாவரி ஆத்துக்காட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43), டேங்கர் லாரி டிரைவர். இவருடைய மனைவி சாந்தி (32). இவர்களின் மகள் ரம்யா லோஷினி(19). திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து இருந்தார்.

மகன் தீனதயாளன்(17). 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் உள்ளான். நேற்று முன்தினம் இரவு, தீனதயாளனை அவனது பெற்றோர் இன்று ஒரு நாள் மட்டும் அருகில் உள்ள பாட்டி வீட்டில் தூங்குமாறு கூறி உள்ளனர். உடனே அவனும் தனது பாட்டி வீட்டுக்கு சென்று தூங்கினான். பின்னர் நேற்று காலையில் அவன் பாட்டி வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு வந்தான்.

வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருக்கவே தீனதயாளன் சத்தம் போட்டு அழைத்தும் கதவு நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவன் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தான். அப்போது தனது பெற்றோரும், அக்காளும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

உடனே அவன், அம்மா, அப்பா, அக்கா என்று கூச்சல் போட்டு கதறவே, அருகில் வசிப்பவர்கள் அங்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தனர். அங்கு ராஜ்குமார் சேலையாலும், சாந்தியும், ரம்யா லோஷினியும் நைலான் கயிற்றாலும் தூக்குப்போட்ட நிலையில் தொங்கி கொண்டு இருந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு