தமிழக செய்திகள்

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

எருமப்பட்டியில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே உள்ள நவலடிபட்டி பற்றி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் காயத்ரி (வயது 19). இவர் 12-ம் வகுப்பு வரை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி அன்று மாலையிலிருந்து தனது மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர் எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன்பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவரான பிரவீன் (21) என்பவருடன் காயத்ரி திருமணம் செய்து கொண்டு எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பிரவீன் பெற்றோர் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாத நிலையில் அவர்களை காயத்ரியின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்