தமிழக செய்திகள்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

தினத்தந்தி

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சின்னாக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மோகன்ராஜ் (வயது 27). இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். அதே பகுதிய சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் கமலி (22). பி.எஸ்சி. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

மாகன்ராஜ், கமலி ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திருமணம் செய்ய முடிவு செய்த காதல் ஜோடிகள் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் நேற்று அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருதரப்பு பெற்றோர்களும் காதல் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கமலியை அவருடைய கணவர் மோகன்ராஜ் உடன் அனுப்பி வைத்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு