தமிழக செய்திகள்

இன்ஸ்டாவில் இளம்பெண்ணுக்கு காதல் வலை: வீடியோ காலில் நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பெண்ணிடம் வீடியோ காலில் பேசி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மதுரை,

மதுரை, ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறிய அருண்குமார், வீடியோ கால் மூலமாக அந்த பெண்ணை நிர்வாணமாக பேச வைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, வீடியோக்களை வைத்து அருண்குமார் அந்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், அருண்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு