தமிழக செய்திகள்

குறைந்த நீர்வரத்து: வைகை, முல்லைபெரியாறு அணைகளில் நீர் திறப்பு குறைப்பு

பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை, முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

தினத்தந்தி

கூடலூர்,

பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை, முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனவே மழை வரும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பொதுமக்களை ஏமாற்றி சென்றது.

நீர்வரத்து குறைந்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 127.70 அடியாக உள்ளது. 184 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1333 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 1267 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 67.32 அடியாக உள்ளது. 804 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1249 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனம் மற்றும் குடிநீருக்காக 1199 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்தும், திறப்பும் இல்லை. சேத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.57 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்