தமிழக செய்திகள்

சந்திர கிரகணம் எதிரொலி- "திருச்செந்தூர் கோயிலில் நாளை 7 மணிநேரம் நடை சாத்தப்படுகிறது

சந்திர கிரகணத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் நாளை 7 மணி நேரம் நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

திருச்செந்தூர்,

நாளை மதியம் 2.39 மணி முதல் மாலை 6.29 மணி வரை சந்திர கிரகணம் என்பதால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கம்போல் அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்படும் என்றும் 4.30 மணிக்கு விஸ்வ ரூபம் தரிசனமும் 5 மணிக்கு உதய மார்த்தாண்டம் அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மாலை 7 மணிக்கு திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 7 மணிக்கு சம்ரோஷண பூஜையும், தொடர்ந்து அஸ்திர தேவருக்கு கடலில் தீர்த்தவாரி நிகழ்வும் நடக்க உள்ளதாகவும், கோயில் திறக்கப்படும் நேரத்தை அறிந்து பக்தர்கள் கோயிலுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது