தமிழக செய்திகள்

சென்னையில் சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்து - 10 பேர் காயம்

சென்னையில் சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை,

செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை ஜன்னல் வழியாக பேலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சொகுசு பஸ் வந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...