தமிழக செய்திகள்

ரூ.1,933.7 கோடி மதிப்பிலான 206 திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

குளங்கள் புனரமைப்பு பணிகள், விரிவான பாதாள சாக்கடைத் திட்டங்கள், புதிய வகுப்பறைகள் உள்ளிட்ட திட்டப் பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது.

தினத்தந்தி

சென்னை, 

தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முடிக்கப்பட்ட திட்டங்களின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலமாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் சுமார் ரூ.1,933.7 கோடி மதிப்பிலான 206 முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் சார்பில், புதிய விளையாட்டு மைதானங்கள், பேருந்து நிலைய மேம்பாடு, புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதிய வணிக வளாகங்கள், கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், குளங்கள் புனரமைப்பு பணிகள், விரிவான பாதாள சாக்கடைத் திட்டங்கள், புதிய வகுப்பறைகள் உள்ளிட்ட திட்டப் பணிகளின் தொடக்க விழா மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 121 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். 

குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழகம் முழுவதும் 71 அறிவுசார் மையங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்