தமிழக செய்திகள்

எம்.சாண்ட் விவகாரம்; தி.மு.க. தொடர்ந்த வழக்கிற்கு பதிலளியுங்கள்: மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.

எம்.சாண்ட் விவகாரம் பற்றி தி.மு.க. தொடர்ந்த வழக்கிற்கு அமைச்சர் வேலுமணி பதிலளிக்க வேண்டும் என மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை மாநகராட்சியில் ஆற்று மணலுக்கு பதில் எம்-சாண்ட் (M-sand) பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள ஊழலை, ஊழல் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் வேலுமணி, சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் முறையாக ஆன்லைன் மூலம் கோரப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்த ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக அ.தி.மு.க. அரசை குற்றம் சாட்டி வருகிறார். அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் இன்றே என் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கூறினார்.

இந்நிலையில், எம்.சாண்ட் விவகாரம் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விவகாரத்தில் அமைச்சர் வேலுமணி பதில் அளிக்க வேண்டும் என தி.மு.க. எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்