தமிழக செய்திகள்

பணப்பட்டுவாடா செய்ததாக கமல்ஹாசன் கூறுவது ஆர்.கே.நகர் மக்களை அவமதிக்கும் செயல் - தினகரன் எம்.எல்.ஏ.

பணப்பட்டுவாடா செய்ததாக கமல்ஹாசன் கூறுவது ஆர்.கே.நகர் மக்களை அவமதிக்கும் செயல், கமலுக்கு ஆர்.கே.நகர் மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. கூறினார். #TTVDhinakaran

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகரில் பணம் தான் வெற்றி பெற்றது என்றால் ஓட்டுக்கு ரூ.6,000 என்று மொத்தம் ரூ.120 கோடி கொடுத்தவர்கள்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. கமல்ஹாசன் என்ன எழுதி இருக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. பணம்தான் வெற்றி பெற்றது என்றால் ஆர்.கே.நகர் தொகுதி மக்களை கமல்ஹாசன் கேவலப்படுத்துகிறாரா? அவர்கள் மீது குறை சொல்கிறாரா? அவர் சொல்வது போல பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டருந்தால் அ.தி.மு.க. ஜெயித்திருக்க வேண்டும். அவர் எதை சொல்கிறார், என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை.

தேர்தலில் பணம் பட்டுவாடா செய்தோம் என்று கமல்ஹாசன் எதை வைத்து சொல்கிறார்? அ.தி.மு.க.வாக இருக்கட்டும், தி.மு.க.வாக இருக்கட்டும் தோற்றுப் போனவர்கள் சொன்ன வார்த்தைதான் அது. ஆனால் இதை கமல்ஹாசன் சொல்கிறார் என்றால் இது அவரது தரத்தைதான் காட்டுகிறது. இதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆர்.கே.நகர் தொகுதி மக்களை அவர் கேவலப்படுத்துவதாகவே நான் கருதுகிறேன். இந்த பிரச்சினைக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஏற்கனவே முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். திரும்ப திரும்ப சொல்வதால் பொய் உண்மையாகி விடாது இவ்வாறு அவர் கூறினார்.

#TTVDhinakaran / #CashDistribution / #KamalHaasan / #RKNagar

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு