தமிழக செய்திகள்

மாதவ் சதாசிவ கோல்வால்கர் பிறந்த நாள் - நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

அவரது வாழ்க்கையும் வழிகாட்டுதலும் பல தலைமுறைகளை ஊக்குவித்து வருவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சமூக ஒற்றுமை, கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் தேசப்பற்றை வலியுறுத்தி வாழ்நாள் முழுவதும் தன் சிந்தனைகள் மூலம் பலரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய குருஜி மாதவ் சதாசிவ கோல்வால்கரின் பிறந்த நாள் இன்று.

ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் இரண்டாம் சர்சங்க்சலக் பொறுப்பேற்று தன் செயல்கள் மூலம் பாரத தேசம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வலுப்பெறச் செய்தார். அவரது வாழ்க்கையும் வழிகாட்டுதலும் பல தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது, தனது வாழ்க்கையை தேச சேவைக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்த அடித்தளத்திற்கும் அர்ப்பணித்த குருஜியை இந்த நாளில் நினைவுகூர்ந்த மரியாதை செலுத்துவோம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.