சென்னை,
இதுகுறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆண்டுதோறும் ஆகஸ்டு 22-ந் தேதியான இன்று (புதன்கிழமை) சென்னை தினமாக (மெட்ராஸ் டே) கடைப்பிடிக்கிறார்கள். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டதன் நினைவாக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.