தமிழக செய்திகள்

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சாமி தரிசனம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவலில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சாமி தரிசனம் செய்தார்

தினத்தந்தி

திருக்கடையூர்:

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுள் ஹோமம், மணிவிழா, சதாபிஷேகம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி குடும்பத்துடன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நேற்று வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கோபூஜை, கஜபூஜை, செய்து வழிபட்டார். பின்னர் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கணேச குருக்கள் அபிராமி படம் மற்றும் கோவில் பிரசாதம் வழங்கினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை