தமிழக செய்திகள்

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்டத்தில் முறைகேடு - விசாரணைக்கு துணைவேந்தர் உத்தரவு

ஆன்லைன் தேர்வில் முறையாக பதிவு செய்யாத 117 பேர் முறைகேடு செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொலைதூரக்கல்வி திட்டத்தின் கீழ் ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்தன. கடந்த காலங்களில் அரியர் வைத்திருந்த மாணவர்களும் இந்த ஆன்லைன் தேர்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதில் முறையாக பதிவு செய்யாத 117 பேர் முறைகேடு செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் சொக்கலிங்கம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவை அமைத்து பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவின் விசாரணையின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு