தமிழக செய்திகள்

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமி நியமனம் - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமி, காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக செல்லத்துரை நியமனம் செய்யபட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி


சென்னை

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக செல்லத்துரை நியமனம் செய்யபட்டு உள்ளார். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 3 அல்லது 4 மாதங்களில் துணைவேந்தரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப 6 மாதத்திற்கு முன்பே பட்டியல் தயாரிக்கப்படும். துணைவேந்தர் பதவிக்கான கல்வித்தகுதி குறித்து ஆளுநருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்