தமிழக செய்திகள்

மதுரை: வெந்நீரில் விழுந்த 7 மாத பெண் குழந்தை சாவு

மதுரை மாடக்குளம் பகுதியில் 7 மாத குழந்தை கட்டிலில் இருந்து தவறி கீழே இருந்த வெந்நீர் வாளியில் விழுந்தது.

தினத்தந்தி

மதுரை மாடக்குளம் பகுதியை சேர்ந்தவர் சேதுபதி (வயது 31). இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுடைய 7 மாத பெண் குழந்தை அதிகாஸ்ரீ. சம்பவத்தன்று குழந்தையை கட்டிலில் தூங்க வைத்து விட்டு, விஜயலட்சுமி வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர்' பயன்படுத்தி வாளியில் தண்ணீரை கொதிக்க வைத்திருந்தார். அந்த சமயத்தில் குழந்தை கட்டிலில் இருந்து தவறி கீழே இருந்த வெந்நீர் வாளியில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து