தமிழக செய்திகள்

மதுரை அரசு கொரோனா மருத்துவமனை: மின்விசிறி தலையில் விழுந்து பெண் நோயாளி காயம்

மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் மின்விசிறி கீழே விழுந்து பெண் நோயாளி தலையில் காயம் ஏற்பட்டது.

மதுரை

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென் தமிழகத்தில் அதிநவீன வசதிகளோடு பல்நோக்கு மருத்துவமனையாக செயல்படும் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கடந்த 30ஆம் தேதி முதல் மதுரை பேரையூர் மள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற மூதாட்டி கொரோனா தொற்றால் நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் படுக்கைக்கு அருகே இருந்த மின்விசிறி திடீரென பழுதாகி படுக்கையில் அமர்ந்திருந்த பாண்டியம்மாள் தலையில் விழுந்தது.

அதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அங்கு சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT