தமிழக செய்திகள்

மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு முடிவை வெளியிடக்கூடாது

மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு முடிவை வெளியிடக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

மதுரை ஐகோர்ட்டில் சுமதி, துர்காசுதா, பிரவீன், பார்த்திபன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களில், மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுதினோம். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றோம். ஆனால் எங்களை அடுத்தகட்ட நேர்முகத்தேர்வுக்கு இதுவரை அழைக்கவில்லை. எனவே நேர்முகத்தேர்வில் பங்கேற்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது "மனுதாரர்களை நேர்முக தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர்களிடம் நேர்முகத்தேர்வை நடத்தி, அதன் முடிவுகளை, இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். மற்றவர்களின் நேர்முகத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதை வருகிற 11-ந்தேதி வரை ஒத்திவைக்க வேண்டும். அந்த முடிவுகள் இந்த கோர்ட்டின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று தெரிவித்து, விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை