தமிழக செய்திகள்

தாய்லாந்தில் நடந்த யோகா போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை

தாய்லாந்தில் நடந்த யோகா போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை படைத்தனர்

தினத்தந்தி

ஏசியன் யோகாசன சாம்பியன்ஷிப் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடந்தது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த போட்டிகள் 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடந்தது. இதில், இந்தியா, ஈரான், தாய்லாந்து உள்ளிட்ட 16 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்களுக்கு 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மதுரை தியாகராஜர் கல்லூரியில் முதலாம் ஆண்டு விலங்கியல் துறை மாணவர் வெங்கட்கிருஷ்ணன், ஆர்டிச் சிங்கிள் பிரிவில் உலக அளவில் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். இதுபோல், மதுரை சக்குடி கல்யாணி மெட்ரிக்குலேசன் பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் வெற்றி மாறன் 8 வயது முதல் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உலக அளவில் 4-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார். ஆர்டிச் சோலோ பரிவில் மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த அமுதன் என்ற மாணவர், 4-ம் இடத்தை பிடித்தார். வெற்றி பெற்ற அந்த மாணவர்களை பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பயிற்சியாளர் ஞானவேல் என்ற ஜீவா உள்ளிட்டோர் பாராட்டினர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்