தமிழக செய்திகள்

மதுரை: கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை

மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

தினத்தந்தி

மதுரை,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு, பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலானது. இதன்பின்பு பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற தொடங்கின. முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் என தொடங்கி, இணை நோய் கொண்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் என தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்தன.

இதன்பின்னர், 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது என கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதன்படி, ரேசன் கடை, வர்த்தக நிறுவனங்கள், திரையரங்கு, சூப்பர் மார்க்கெட், கடை வீதிகள், துணிக்கடைகள், வங்கிகள் உள்பட 18 பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்