தமிழக செய்திகள்

மார்ச் 29-ந் தேதி முதல் மதுரை-சிங்கப்பூர் விமான சேவை மீண்டும் தொடக்கம் - விமான நிலைய அதிகாரிகள் தகவல்

மார்ச் 29-ந் தேதி முதல் மதுரை-சிங்கப்பூர் விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

மதுரை,

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் சர்வதேச விமான சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை இருந்தது. இந்தநிலையில், மார்ச் 29-ந் தேதி முதல் வாரத்திற்கு 2 நாட்கள் (செவ்வாய் மற்றும் சனிக்கிழமை), சிங்கப்பூருக்கு மீண்டும் விமானம் இயக்கப்பட உள்ளது.

அதன்படி சிங்கப்பூரில் இருந்து (சிங்கப்பூர் நேரப்படி) மாலை 5 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 6.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும். தொடர்ந்து அதே விமானம் மதுரையில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூர் சென்றடையும். மதுரை-சிங்கப்பூர் விமான சேவைக்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு