தமிழக செய்திகள்

தொடர்மழையால் நிரம்பி வழியும் மதுராந்தம் ஏரி - 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

மதுராந்தகம் ஏரியில் இருந்து இன்று வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, அந்த மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டியது. நேற்று வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்றைய தினம் 3 மடங்காக உயர்ந்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மதுராந்தகம் ஏரியில் இருந்து இன்று வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மழை தொடர்ந்து பெய்து வந்தால், மதுராந்தகம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 6 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு