விருதுநகர்,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாளை (புதன்கிழமை) மகாளய அமாவாசை என்பதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு மகாளய அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில், மகாளய அமாவசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு நாளை, நாளை மறுநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 நாள் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறு என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதிக்கு வர வேண்டாம் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பாகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மகாளய அமாவாசையை முன்னிட்டு தாணிப்பாறை அடிவாரம் பகுதிக்கு பக்தர்கள் வருகையை தடுப்பதற்காக தாணிப்பாறை விளக்கு மற்றும் மகாராஜபுரம் விளக்கு பகுதிகளில் வத்திராயிருப்பு போலீசார் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.